×

வைஜெயந்தி மாலாவுக்கு எல்.முருகன் நேரில் வாழ்த்து

சென்னை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:‘பத்ம விபூஷன்’ விருது அறிவித்து கவுரவிக்கப்பட்டுள்ள, பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகையும், கர்நாடக சங்கீத கலைஞருமான வைஜெயந்தி மாலாவை, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டதோடு, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தன்னுடைய இல்லத்தை ஒரு வரலாற்று அருங்காட்சியகம் போல் வைத்திருக்கும் அவர், அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்றவர்களோடு நடித்த அனுபவங்களையும், மக்களவை உறுப்பினராக பணியாற்றிய காலக்கட்டங்களிலும் அதற்கு பிறகான காலக்கட்டங்களிலும், அப்போதைய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் என பெரும் தலைவர்களோடு, தனக்கு இருந்த நட்பு குறித்த அனுபவங்களையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். இத்தனை பாரம்பரியம் மிக்க மற்றும் பழம்பெரும் கலைஞருக்கு “பத்ம விபூஷன்” விருது வழங்கி கவுரவித்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

The post வைஜெயந்தி மாலாவுக்கு எல்.முருகன் நேரில் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : L. Murugan ,Vyjayanthi Mala ,Chennai ,Union Minister ,Sangeet ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...